உள்ளூர் செய்திகள்

வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன; அவை உங்கள் கைகளில்: ஸ்ரீராம் பேச்சு

சென்னை: தினமலர் நடத்திய வழிகாட்டி நிகழ்ச்சியில் மாணவர்களுக்கான வாய்ப்புகள் குறித்து சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீராம் பேசினார்.அவர் பேசியதாவது:திறன் வளர்த்தால் மட்டும் போதாது; சுயமாக சிந்தித்து படிக்க வேண்டும்; பிரச்னைகளை புரிந்து கொண்டு, அவற்றுக்கு தீர்வு வழங்க வேண்டும். 678 எனப்படும் செயற்கை நுண்ணறிவு துறை எடுத்தாலும், கணிதத்தை புரிந்து படிக்க வேண்டும். சுயமாக யோசிக்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஜப்பான், ஜெர்மனி, தைவான் உள்ளிட்ட நாடுகளில் இன்ஜினியரிங் தேவை அதிகமாக உள்ளது.எனவே, தமிழ், ஆங்கில மொழியுடன், ஜப்பான், தைவான், ஜெர்மன் உள்ளிட்ட மற்ற நாட்டு மொழிகளையும் கற்பது அவசியம். இன்ஜினியரிங் என்பது ஜாலியான படிப்பு இல்லை. படித்த உடன் வேலை கிடைக்க, கல்லுாரியில் சேரும் முதல் நாளில் இருந்து, மாணவர்கள் மதிப்பெண்களை தாண்டி படித்து, திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அறிவாற்றல், சான்றிதழ், திட்டம், பயிற்சி, சாதனை என ஐந்து விதமான திறனை, படிக்கும் காலத்திலேயே வளர்த்துக் கொண்டு, அவற்றை தங்களது பயோ டேட்டாவில் குறிப்பிடுவது முக்கியம்.இந்த ஐந்து திறன்களை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள, மேம்பட்ட கல்வியை சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி வழங்குகிறது. படித்து முடித்ததும் வேலை கிடைக்க வேண்டும் என்றால், தொழில் நிறுவனங்கள் விருப்பம் என்ன என்பதை புரிந்து படித்திருக்க வேண்டும். ஏ.ஐ. துறையில் வேலை வாய்ப்பு உயர்ந்து வருகிறது. இதை தவிர, எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் பிரிவிலும் வேலை வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த பிரிவை தாராளமாக தேர்வு செய்யலாம். எப்படிப் படிக்கப் போகிறோம்; என்ன மாதிரியான வாய்ப்புகள் உருவாகப் போகிறது என்பதை அறிந்து படிக்க வேண்டும்; வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன; அவை உங்கள் கைகளில் உள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்