உள்ளூர் செய்திகள்

திறந்த நிலை பள்ளியில் விளையாட்டு வீரர்களுக்கு புதிய பாடங்கள் அறிமுகம்

சென்னை: தேசிய திறந்த நிலை பள்ளியில், அடுத்த கல்வி யாண்டு முதல், விளையாட்டு வீரர்களுக்காக புதிய பாடங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.மத்திய கல்வித்துறையின் கீழ் இயங்கும், தேசிய திறந்த நிலை பள்ளியில், ஆரம்ப கல்வி, எட்டு, 10ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், விளையாட்டில் ஆர்வமிருந்து, பள்ளியின் அன்றாட பாடங்களில் கவனம் செலுத்த முடியாத மாணவ - மாணவி யருக்காக, அடுத்த கல்வியாண்டு முதல், விளையாட்டு தொடர்பாக ஐந்து புதிய பாடங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.பத்தாம் வகுப்பில், யோகா, உணவு தொழில்நுட்பம், விளையாட்டு மேலாண்மை ஆகிய மூன்று பாடங்களும், பிளஸ் 2 வகுப்பில் யோகா அறிவியல், விளையாட்டு மேலாண்மை என்ற இரண்டு பாடங்களும் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதற்கான புத்தகங்கள் தயாரிக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்