உள்ளூர் செய்திகள்

மாநில துளிர் வினாடி வினா போட்டி ராமநாதபுரம் பள்ளிகள் சாதனை

ராமநாதபுரம்: மாநில அளவிலான துளிர் வினாடி வினா போட்டியில் ராமநாதபுரத்தை சேர்ந்த தனியார் பள்ளிகள் முதலிடம், மூன்றாமிடம் பெற்றுள்ளன.தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாநில அளவிலான துளிர் வினாடி வினா போட்டி நெய்வேலி என்.எல்.சி., ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.மாநில பொதுச் செயலாளர் முகமது பாதுஷா தலைமை வகித்தார். ராமநாதபுரத்தில் இருந்து 9 பள்ளிகளை சேர்ந்த 35 மாணவர்கள் கலந்து கொண்டனர்.ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் ஜீவானந்தம் வழிகாட்டுதலில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கணேசன், மகளிர் ஒருங்கிணைப்பாளர் கல்பனா, செயற்குழு உறுப்பினர் சுதாகர் மாணவர்களை அழைத்து சென்றனர்.இதில், கீழக்கரை ஹமீதியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் தமிழ்பிரிவு போட்டியில் முதலிடம் பிடித்தனர். ராமநாதபுரம் வேலுமாணிக்கம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 9, 10ம் வகுப்பு மாணவர்கள் மூன்றாம் இடம் பிடித்தனர். மண்டல அளவிலான போட்டியில் தமிழ் பிரிவில் முத்துவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சாயல்குடி கே.எஸ்.எஸ்.என்., நடுநிலைப் பள்ளி, சாயல்குடி அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளிட்டவை வெற்றி பெற்றன. ஆங்கில பிரிவில் ராமநாதபுரம் லுாயிஸ் லெவேல் மெட்ரிக் பள்ளி, வேலு மாணிக்கம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் வெற்றி பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம், சான்றிதழ் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்