உள்ளூர் செய்திகள்

ஜெர்மனி தொழில் துறை அமைப்பின் டிரஸ்டி நியமனம்

சேலம்: ஜெர்மனி தொழில்துறை வளர்ச்சி அமைப்பின் டிரஸ்டியாக, சேலம் மாவட்ட சிறு , குறுந்தொழிற்சாலைகள் சங்கத்தலைவர் இன்ஜினியர் மாரியப்பன் நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச அளவில், 60 நாடுகளில் சமூககல்வி, தொழில்வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு பணிகளை, எஃப்.என்.எஃப்., பவுண்டேஷன் (தொழில்துறை வளர்ச்சி அமைப்பு) செய்து வருகிறது. சிறு மற்றும் குறு தொழிற்சாலைகளை அதிகளவில் நிறுவவும், அவை தரமான பொருட்களை ஜெர்மனி தொழில்நுட்பத்துடன் தயாரிக்கவும், உலகளவில் ஏற்றுமதி செய்யவும் இந்த அமைப்பு வழிகாட்டுகிறது. மேலும், கல்லூரி மாணவர்களுக்கு தரமான தொழிற்பயிற்சி, மகளிர் சுய வேலை திட்டத்தில் உள்ள பெண்களுக்கு, பல்வேறு தொழில்முறை பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறது. இந்த அமைப்பின் டிரஸ்டியாக, சேலம் மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள் சங்கத்தலைவர் மாரியப்பன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: அடுத்த இரண்டு ஆண்டுகளில், ஜெர்மனி நாட்டின் நவீன தொழில் நுட்பங்களை பெற்று, மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு தொழில் திட்டங்கள் சேலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும். இதன் மூலம், மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்