அலுவலர்கள் இன்றி கல்வித்துறை பணிகள் பாதிக்கும் சூழல்
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட கல்வி, தொடக்க கல்வித்துறை அலுவலர்கள் இன்றி, கல்வித்துறை பணிகள் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது. சிவகங்கை கல்வி மாவட்ட அலுவலராக இருந்த சீனிவாசன் 4 மாதத்திற்கு முன் ஓய்வு பெற்றார். தேவகோட்டை கல்வி மாவட்ட அலுவலரான மனோகரன் பதவி உயர்வில் சென்னைக்கு மாற்றப்பட்டார். சிவகங்கை தொடக்கக் கல்வி அலுவலர் ரவிக்குமார், சில நாட்களுக்கு சி.இ.ஓ., வாக பதவி உயர்வில் நீலகிரிக்கு சென்றுள்ளார். மாவட்டத்தில் மூவிடத்திற்கு கல்வி அலுவலர்கள் இன்றி, மாவட்ட, தொடக்க கல்வித்துறை பணி பாதிக்கிறது. நிர்வாக ரீதியாக சில முடிவுகளை எடுக்க முடியாமல் கல்வித்துறை ஊழியர்கள் சிக்கலில் உள்ளனர். பொறுப்பு அலுவலர்கள் இருந்தாலும், ஒரு சில பைல்களுக்கு ஒப்புதல் பெறுவதில் சிரமம் இருப்பதாக ஊழியர்கள், தலைமை ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.