மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள் மற்றும் மடிக்கணினி
கடம்பத்துார்: கடம்பத்துார் ஒன்றிய பகுதிகளில், 1,502 மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள் மற்றும் மடிக்கணினி வழங்கப்பட்டது. கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட, கடம்பத்துார் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு ஒன்றிய குழு தலைவர் தட்சிணாமூர்த்தி, துணை தலைவர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ., ரமணா, சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, 194 பேருக்கு விலையில்லா சைக்கிள்களும், 175 பேருக்கு விலையில்லா மடிக்கணினிகளும் வழங்கி பேசினார். இதேபோல், கொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் 171 பேருக்கும், பேரம்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 325 பேருக்கும், கீழச்சேரி அரசு நிதி உதவிபெறும் பள்ளியைச் சேர்ந்த 637 பேர் என, மொத்தம் 1,502 மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள் மற்றும் மடிக்கணினி வழங்கப்பட்டது.