ஜப்பானிடமிருந்து இந்தியா கற்க வேண்டும்: பிரதமர் மோடி
டோக்கியோ: இந்தியா தனது ஆரம்பக் கல்விமுறையை சிறப்பாக்க, ஜப்பானிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் மோடி இதுதொடர்பாக கூறியதாவது: ஜப்பானிய கல்விமுறையில் உள்ள நெறிமுறைகள் மற்றும் ஒழுக்கம் சார்ந்த அம்சங்களை கற்றுக்கொள்வது அதிக பலனைத்தரும். ஜப்பான் நாட்டின் ஆசிரியர்கள் இந்தியாவிற்கு அதிகளவில் வருகை தந்து, உங்களின் மொழியை எங்கள் நாட்டில் கற்றுத்தர வேண்டும். ஏனெனில், ஜப்பான் மொழி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் இந்தியாவில் மிகவும் குறைவு. இந்தியாவின் CBSE பள்ளிகள், ஜப்பான் மொழியைக் கற்றுக்கொடுக்கத் தொடங்கியுள்ளன. ஜப்பான் மொழி தொடர்பான படிப்புகள் ஆன்லைனில் கிடைக்கப்பெறின், அப்படிப்புகளை இந்திய மாணவர்கள் மேற்கொள்வார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.