அரசு கலை கல்லூரியில் ஆசிரியர் தின விழா
திண்டிவனம்: திண்டிவனம் அரசு கலை கல்லூரியில் ஆசிரியர் தின விழா நடந்தது. திண்டிவனம் அரசு கலைக்கல்லூரி வரலாற்று துறை மாணவ, மாணவிகள் சார்பில் நடந்த ஆசிரியர் தின விழாவிற்கு துறை தலைவர் உஷா ரகோத்தம், தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ரேவதி சிறப்புரையாற்றினார். மாணவ, மாணவிகள் சார்பில் பேராசியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. பேராசிரியர்கள் முத்துராமன், கமலக்கண்ணன், விஜயரங்கன், கவுரவ விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.