உள்ளூர் செய்திகள்

விரிவுரையாளர் பணிக்கான தகுதி தேர்வு (நெட்) அறிவிப்பு

இந்த தேர்வு ஆண்டுதோறும் ஜுன் மற்றும் டிசம்பர் மாதங்களில் இரண்டு முறை நடத்தப்படுகிறது. பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) இத்தேர்வை நடத்துகிறது. இதன்படி, டிசம்பர் 27ம் தேதி நெட் தேர்வு நடைபெற உள்ளது. முதுநிலை பட்டம் பெற்றவர்கள், தற்போது முதுநிலை பட்டப்படிப்பில் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருப்பவர்கள் இத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். இத்தேர்வு எழுத முதுநிலை படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர், உடல் ஊனமுற்றோர் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதும். தேர்வுக்கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு ரூ.450. ஓ.பி.சி., பிரிவினருக்கு ரூ.225. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், உடல் ஊனமுற்றோருக்கு ரூ.110 தமிழகத்தில் சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவை ‘நெட்’ தேர்வு மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்வு எழுத விரும்புவோர் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை இந்த பல்கலைக்கழகங்களில் ஏதாவது ஒன்றிற்கு மட்டுமே அனுப்ப வேண்டும். யு.ஜி.சி.,க்கு நேரடியாக அனுப்பக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு பற்றிய முழு விவரம், பாடத்திட்டம் மாதிரி விண்ணப்ப படிவம் ஆகியவை யு.ஜி.சி. இணையதளத்தில் (www.ugc.ac.in) வெளியிடப்பட்டுள்ளது. அக்., 24ம் தேதி வெளியாகும் ‘எம்ப்ளாய்மெண்ட் நியூஸ்’ இதழிலும் இத்தேர்வு பற்றிய முழு விவரங்கள் வெளியாகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்