உள்ளூர் செய்திகள்

அரசு கலை கல்லூரியில் சைபர் கிளப் துவக்கம்

கோவை: கோவை அரசு கலைக்கல்லுாரியில் சைபர் கிளப் துவக்கவிழா, கல்லுாரி அரங்கில் நடந்தது. கல்லுாரி முதல்வர் உலகி துவக்கி வைத்தார்.இதில், மாநகர சைபர் கிரைம் எஸ்.ஐ., கருப்புசாமி வலைதளம் தொடர்பான குற்றங்களும், அதன் விளைவுகளும் குறித்து, மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். செயலிகளை பயன்படுத்தும் போது கையாள வேண்டிய நடைமுறைகள், தரவு திருட்டுக்கள், மொபைல் போன் பாதுகாப்பாக பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்து, மாணவர்களுடன் கலந்துரையாடினார்.நிகழ்ச்சியில், ஹேக்கப் டெக்னாலஜிஸ் தலைவர் தினேஷ் அராந்தகன், சைபர் கிளப் செயலாளர் மகேந்திரன், தாவரவியல் துறை உதவி பேராசிரியர் தீபாஉள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்