உள்ளூர் செய்திகள்

ஆசிரியர் பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தல்

சேலம்: ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியது.சேலம் மாவட்ட தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக, மாவட்ட பொதுக்குழு கூட்டம், அம்மாபேட்டையில் நேற்று நடந்தது. மாவட்ட செயலர் ரவி தலைமை வகித்தார். அதில் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்றுதல்; ஆசிரியர்களின் பணி வரன்முறை உள்ளிட்ட குறித்து தீர்வு காண மாதந்தோறும், 2வது சனிக்கிழமை குறைதீர் கூட்டம் நடத்தல்; 10ம் வகுப்பு தேர்வில், 100 சதவீத தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்களை பாராட்டி சான்றிதழ் வழங்குதல்; ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் பணிக்கு பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்வதில் இருந்து விலக்களித்தல் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மேலும் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற வெங்கடேசன், சரவணன், லெனின் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாவட்ட பொருளாளர் சுரேஷ்குமார், முன்னாள் மாநில பொதுச்செயலர் கோவிந்தன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்