உள்ளூர் செய்திகள்

நீட், ஜே.இ.இ.,மறு தேர்வு எழுதுவோருக்கு பயிற்சி ப்ரீ

கோவை: நீட், ஜே.இ.இ., தேர்வு மீண்டும் எழுதவுள்ள, பொருளாதாரத்தில் பின்தங்கியோரின், மருத்துவராகும் கனவை நிறைவேற்றும் வகையில், சுவாமி விவேகானந்தா சேவா கேந்திரம் சார்பில், ராம்நகரில் இலவச பயிற்சி வகுப்பு நடக்கிறது.காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை, பாட வல்லுநர்களை கொண்டு வகுப்பு எடுக்கப்படுகிறது. இதேபோல், ஜே.இ.இ., தேர்வுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கான புத்தகங்கள், இலவசமாக வழங்கப்படுவதோடு, வாரந்தோறும் தேர்வு நடத்தி, கற்றல் நிலையும் தொடர்ந்து பரிசோதிக்கப்படுகிறது.இதுதவிர, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும், அறிவியல் பாடப்பிரிவு மாணவர்களுக்கு, மாலை நேர டியூஷன் இலவசமாக நடத்தப்படுகிறது. முக்கிய பாடங்களுக்கான பயிற்சியோடு, நீட், ஜே.இ.இ., நுழைவுத்தேர்வுக்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்படுகின்றன.சிற்றுண்டியுடன், தினமும் தன்னம்பிக்கை வகுப்புக்குப் பின், டியூஷன் துவங்கும். இதற்கு முன்பதிவு செய்ய, 63812 63424/ 99447 53477 ஆகிய எண்களிலோ அல்லது காந்திபுரம், ராம்நகர் விவேகானந்தா- செங்குப்தா வீதி சந்திப்பில் உள்ள இலவச பயிற்சி மையத்தை நேரிலோ, தொடர்பு கொள்ளலாம் என, பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் லதா தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்