உள்ளூர் செய்திகள்

பி.ஜி., ஆசிரியர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

மதுரை: மதுரையில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட மற்றும் கல்வி மாவட்ட நிர்வாகிகள் தேர்தல், மாநில நிர்வாகிகள் அன்பழகன், தவமணி, செந்தில்குமாரி முன்னிலையில் நடந்தது.இதில் மாவட்ட தலைவர் பாண்டி, செயலாளர் முத்துகுமார், பொருளாளர் ராமசாமி, துணை தலைவர்கள் செந்தில்குமாரி, முனியாண்டி, இணை செயலாளர்கள் அன்புதவமணி, இந்திரா காந்தி, உதவி பெறும் பள்ளி செயலாளராக பாண்டியராஜன், அமைப்பு செயலாளர் சாலமன் புஷ்பராஜ், தலைமையிடச் செயலாளராக பழனிவேல்ராஜன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.மேலுார் கல்வி மாவட்ட தலைவராக அன்புசெல்வம், செயலாளர் முருகன், பொருளாளர் மகேஸ்வரன், மதுரைக் கல்வி மாவட்ட தலைவராக ஏழுமலை, செயலாளர் பிரபு, பொருளாளராக சதீஷ்குமார், துணை தலைவர்கள், இணை செயலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இந்திய ஆசிரியர் கூட்டமைப்பு முன்னாள் அகில இந்திய செயலாளர் சுரேஷ், மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கழக மாவட்ட செயலாளர் சந்திரன், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சீனிவாசன், இடைநிலை ஆசிரியர் சங்க முன்னாள் செயலாளர் பாலமுருகன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்