உள்ளூர் செய்திகள்

வேளாண் பல்கலையில் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலையில், பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி இன்றும், நாளையும் அளிக்கப்படவுள்ளது.இப்பல்கலையில் தொழில்முனைவோர் திறன் மேம்பாடு சார்ந்த பல்வேறு பயிற்சிகள் தொடர்ந்து அளிக்கப்படுகின்றன. அதன் படி, வேளாண் பல்கலை அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது.இதில், ரொட்டி வகைகள், கேக் , பிஸ்கட், பப்ஸ், கட்லெட், சமோசா, தயாரிப்பு குறித்த பயிற்சி அளிக்கப்படவுள்ளது. ஆர்வமுள்ளவர்கள், 94885-18268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்