நவீன வசதிகளுடன் திருச்சி என்.ஐ.டி.,யில் அமிதிஸ்ட் விடுதி
திருச்சி: வைர விழாவை முன்னிட்டு, திருச்சி, என்.ஐ.டி.,யில் 1.2 லட்சம் சதுர அடியில், நான்கு மாடிகளுடன், 506 மாணவர்கள் தங்கும் வகையில், 253 அறைகளுடன் அமிதிஸ்ட் விடுதியை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.தமிழகத்தில் வரும் பிரதமர் மோடி திருச்சியில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்கிறார். ரூ.19.980 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். வைர விழாவை முன்னிட்டு, திருச்சி என்.ஐ.டி.,யில் புதிதாக கட்டப்பட்ட அமிதிஸ்ட் விடுதி இந்தியாவில் உள்ள என்.ஐ.டி.,களில் முதலிடத்தில் உள்ளது. திருச்சி, என்.ஐ.டி.,யில் 2019- 20ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு 10 சதவீதம் சிறப்பு ஒதுக்கீடு (இ.டிபிள்யூ.எஸ்.,) வழங்கப்பட்டது. அதனால், மாணவர் சேர்க்கை அதிகரித்தது.இந்தியாவில் உள்ள என்.ஐ.டி.,களில் முதலிடத்தில் உள்ள திருச்சி, என்.ஐ.டி.,யில் 2019- 20ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு 10 சதவீதம் சிறப்பு ஒதுக்கீடு (இ.டிபிள்யூ.எஸ்.,) வழங்கப்பட்டது. அதனால், மாணவர் சேர்க்கை அதிகரித்தது.அதற்காக, வைப்பைவ், புரொஷக்டர் போன்ற நவீன வசதிகளுடன், இந்திய அரசு நிதி, 41 கோடி ரூபாயில், 1.2 லட்சம் சதுர அடியில், நான்கு மாடிகளுடன், 506 மாணவர்கள் தங்கும் வகையில், 253 அறைகளுடன் அமிதிஸ்ட் விடுதி கட்டப்பட்டுள்ளது. என்.ஐ.டி.,யின் வைர விழாவில் திறக்கப்படும், இந்த விடுதி முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது.