உள்ளூர் செய்திகள்

ஆண்டின் முதல் நாளில் பெற்றோருக்கு பாத பூஜை

ஷிவமொகா: ஆங்கில புத்தாண்டின் முதல் நாளில், ஷிவமொகாவில் உள்ள பள்ளி ஒன்று, மாணவர்களை தங்கள் பெற்றோருக்கு பாத பூஜை செய்ய வைத்து உள்ளது.ஷிவமொகா நகரில் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் ஆண்டுதோறும், ஆங்கில புத்தாண்டு வித்தியாசமாக கொண்டாடுகிறது. ஆனால், அபினகட்டே ராமகிருஷ்ணா குருகுல உறைவிடப் பள்ளியில் நேற்று மாணவர்களின் பெற்றோர் அல்லது அவர்களின் பாதுகாவலர்களுக்கு பாதபூஜை செய்யும் நிகழ்ச்சியை நடத்தியது. பின், படிப்பிலும், விளையாட்டிலும் சிறப்பாக செயல்படும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.இதுபோன்று கடந்த 19 ஆண்டுகளாக இப்பள்ளியில் ஆண்டின் முதல் நாளில் பெற்றோருக்கு மாணவர்கள் பாதபூஜை செய்து வருகின்றனர்.பள்ளி முதல்வர் ஷோபா கூறியதாவது:எங்கள் பள்ளியில், பெற்றோருக்கு அவர்களின் குழந்தைகள் பாத பூஜை செய்கின்றனர். 2005 - 06 முதல் இந்நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம். குழந்தைகள், பெற்றோரை புறக்கணிப்பதை தடுக்க, அவர்களுக்கு கல்வியுடன், நன்னெறி கல்வி வழங்குவதே, பாதபூஜையின் முக்கிய நோக்கம். குழந்தைகளுக்கு அவர்களின் கடமைகள், பொறுப்புகள் குறித்து தெரியப்படுத்துவதும், பெற்றோர், குழந்தைகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவதும் அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்