உள்ளூர் செய்திகள்

உயர்கல்வியில் விருப்ப பாடம் அறிய மாணவர்களிடம் சர்வே

கோவை: அரசுப்பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்களின், உயர்கல்வி விருப்பப்பாடம் குறித்து, கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களை கொண்டு, தகவல் திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.உயர்கல்வி படிப்புகள், நுழைவுத்தேர்வுகள், மத்திய, மாநில அரசுகளின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, அரசுப்பள்ளிகளில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், உயர்கல்வி வழிகாட்டி மையம் செயல்படுகிறது. இம்மையத்தில், உயர்கல்வி படிக்கும் முன்னாள் மாணவர்கள், கல்லுாரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களும், உறுப்பினர்களாக உள்ளனர்.இவர்களின் உதவியோடு, தற்போது பிளஸ் 2 படிக்கும் மாணவர்களின் உயர்கல்வி விருப்பத்துறை, படிப்புகள் குறித்த விபரங்களை, பிப்., 22 முதல் 26ம் தேதிக்குள், எமிஸ் இணையதளத்தில் பதிவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக, கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்