உள்ளூர் செய்திகள்

மாணவர்களின் ராமாயண நாடகம் உலக சாதனையில் பதிவு

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுாரில் 600 மாணவர்கள் பங்கேற்று, தொடர்ந்து 100 நிமிடங்கள் நடந்த ராமாயணம் நாடகம், மூன்று உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டன.ஸ்ரீபெரும்புதுார் விவேகானந்தா வித்யாலயா பள்ளியின் 25வது ஆண்டு பொன் விழா, சுவாமி விவேகானந்தா வித்யா பீடம் பள்ளி வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது.இதில், பாரதத்தின் பெருமைக்கு உரைகல்லாக திகழ்கின்ற ராமாயணம் நாடகம் பள்ளி மாணவர்களால் அரங்கேற்றப்பட்டது. 100 நிமிடங்கள் நடந்த நாடக நிகழ்வில், 600 பள்ளி மாணவ - மாணவியர் பங்கேற்று அசத்தினர்.இந்த நிகழ்வை, ஆல் இந்திய புக் அப் ரெக்கார்டு, செவ் வேல்டு ரெக்கார்டு மற்றும் பாரதம் புக் அப் பேல்டு ரெக்கார்டு ஆகிய மூன்று அமைப்புகள் உலக சாதனையாக அங்கீகரித்து, அதற்கான சான்றிதழை பள்ளியின் நிறுவனர் ஏழுமலையிடம் வழங்கினர்.உடன், பள்ளியின் தாளாளர் வரதராஜன், பள்ளியின் முதல்வர் கலைவாணி, இசைக்கவி ரமணன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்