உள்ளூர் செய்திகள்

நாக், என்.பி.ஏ., அங்கீகாரம் வழிகாட்டு விதிகளில் மாற்றம்

நாடு முழுதும் செயல்படும் உயர்கல்விநிறுவனங்கள், தங்கள் படிப்புகள், பாடத்திட்டங்களுக்கு ஏற்ப, தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார குழுவான நாக், தேசிய அங்கீகார அமைப்பான என்.பி.ஏ., போன்றவற்றின் அங்கீகாரங்களை பெற வேண்டும்.அத்துடன், தேசிய அளவிலான என்.ஐ.ஆர்.எப்., தரவரிசை பட்டியலிலும், உயர்கல்வி நிறுவனங்கள் இடம் பெற வேண்டும். இதற்கு பல்வேறு விதிமுறைகளை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும்.இந்நிலையில், பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி., சார்பில், அனைத்து பல்கலைகள், கல்லுாரிகளுக்கு அனுப்பபட்டுள்ள சுற்றறிக்கையில், நாக், என்.பி.ஏ., அங்கீகாரங்களை பெறுவதற்கான வழிகாட்டு விதிமுறைகள் மாற்றப்பட்டுஉள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.அதாவது, புதிய கல்வி கொள்கையில் கூறப்பட்டுள்ள அம்சங்களின்படி, விதிகளை பின்பற்றும் நிறுவனங்களுக்கு மட்டுமே, இந்த அங்கீகாரம் கிடைக்கும் வகையில், மாற்றங்கள் செய்யப்பட்டு அதன் விபரங்கள், www.ugc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்