உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி வளாகத்தில் விடுதி கட்ட எதிர்ப்பு

திட்டக்குடி: திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், விடுதி கட்ட எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் மாணவர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தை நகரப் பகுதி பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் நகர மக்களும் நடைபயிற்சிக்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தி.இளமங்கலத்தில் இடிக்கப்பட்ட ஆதிதிராவிடர் மாணவர் விடுதியை, திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் கட்ட நேற்று அளவீடு செய்யப்பட்டது.இதனை அறிந்த முன்னாள் மாணவர்கள் திரண்டு வந்து, அளவீடு பணிகளை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து மாற்று இடத்தில் விடுதி கட்ட பரிந்துரைப்பதாக தலைமை ஆசிரியர் ஜெய்சங்கர் கூறியதை ஏற்று முன்னாள் மாணவர்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்