மருத்துவ இதழியல் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்
சென்னை: தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின் நோய் பரவியல் துறையின் கீழ் பயிற்றுவிக்கப்படும் முதுநிலை மருத்துவ இதழியல் பட்டய படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.இது குறித்து, பல்கலை வெளியிட்ட அறிவிப்பு:முதுநிலை மருத்துவஇதழியல் பட்டய படிப்பு, ஓராண்டு காலம் பயிற்றுவிக்கப்படுகிறது. மொத்தம் எட்டு இடங்கள் இருப்பதால், இளநிலை பட்ட படிப்பை நிறைவு செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.அப்படிப்பின் கீழ், மூன்று தாள்களுக்கான தேர்வு முறை உள்ளது. அவற்றில் அடிப்படை சுகாதாரம், நோய்களின் தாக்கம், பொது சுகாதாரம் குறித்த விபரங்கள், மருத்துவம் சார் சட்டங்கள், மருத்துவ குற்றங்கள், மருந்தியல், ஊட்டச்சத்து குறைபாடுகள், ஆயுஷ் பாரம்பரிய மருத்துவம் உள்ளிட்ட பாடங்கள் இடம்பெற்றுள்ளன.இப்படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கும், கூடுதல் விபரங்களுக்கும், www.tnmgrmu.ac.in என்ற இணையதள முகவரியிலோ, epidtnmgrmu.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 044- 2220 0713 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.