உள்ளூர் செய்திகள்

மாவட்ட அளவிலான தனியார் பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு

விழுப்புரம்: விழுப்புரத்தில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் மாவட்ட அளவிலான தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி நடந்தது.விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லுார், கண்டாச்சிபுரம் ஆகிய வட்டங்கள் இங்குள்ள தனியார் பள்ளி வாகனங்கள் வட்டார போக்குவரத்து அலுவலகம் கட்டுப்பாட்டில் இயங்குகிறது.இங்கு 66 பள்ளிகளில் 243 வாகனங்களும், திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சார்பில் திண்டிவனம், வானுார், மரக்காணம் ஆகிய வட்டங்களில் உள்ள 36 பள்ளிகளில் 187 பள்ளி வாகனங்களும், செஞ்சி மோட்டார் ஆய்வாளர் அலுவலகம் சார்பில் செஞ்சி, மேல்மலையனுார் வட்டங்களில் 27 பள்ளிகளில் 93 வாகனங்கள் என மொத்தம் 129 தனியார் பள்ளிகளில் உள்ள 523 பள்ளி வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது.விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மைதானத்தில் 325 பள்ளி வாகனங்களை கலெக்டர் பழனி ஆய்வு செய்தார். அதில், 64 வாகனங்கள் குறைபாடுகள் கண்டறியப்பட்டதால் தகுதியிழப்பு செய்யப்பட்டது.ஆய்வின் போது பழுதான வாகனங்களை கண்டறிந்து அதை சரிசெய்து மீண்டும் வாகனத்தை கொண்டு வந்து அனுமதி பெற்று செல்ல அறிவுறுத்தப்பட்டது.பின், கலெக்டர் கூறியதாவது:பள்ளி வாகனங்கள் வட்டார போக்குவரத்து துறை மூலம் ஆய்வு செய்து, அனுமதித்த வாகனங்கள் மட்டுமே பள்ளி பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும். அனுமதி பெறாத வாகனங்கள் பயன்படுத்தினால் பறிமுதல் செய்வதோடு, சட்ட விதிகளின்படி சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இந்தாண்டு முதல் ஒவ்வொரு பள்ளி வாகனத்திலும் ஒரு பெண் உதவியாளர் கண்டிப்பாக நியமனம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாகனத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் தினசரி பதிவுகளை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கண்காணிப்பர் என்று கூறினார்.இதில் எஸ்.பி., தீபக் சிவாச், சப்-கலெக்டர் திவ்யான்ஷூ நிகம், வருவாய் கோட்டாட்சியர் காஜா சாகுல்அமீது, டி.எஸ்.பி., சுரேஷ்குமார், சி.இ.ஓ., அறிவழகன், வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்