உள்ளூர் செய்திகள்

அரசு கல்லுாரியில் இன்று இரண்டாம் கட்ட கலந்தாய்வு

கோவை: கோவை அரசு கலைக் கல்லுாரியில் முதல்கட்ட பொது கலந்தாய்வில் 1,142 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.291 காலியிடங்கள் உள்ளன. அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் முதல்கட்ட கலந்தாய்வில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் கட்ட கலந்தாய்வில் மீதமுள்ள காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.இதுகுறித்து, கல்லூரி முதல்வர் எழிலி கூறுகையில், முதாலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று துவங்கவுள்ளது. இதில், 291 காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. மாணவர்கள் சான்றிதழ்கள் சமர்ப்பிக்கும் பணி உள்ளிட்டவை நடந்து வருகின்றன. கலந்தாய்வுகள் நிறைவடைந்த பின்னர், அரசு அறிவுறுத்தலின்படி முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் ஜூலை 3ம் தேதி துவக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்