சட்ட உதவி வக்கீல் பணிக்கு நேர்காணல்
கோவை: கோவையில் சட்ட உதவி வக்கீல் பணிக்கான நேர்காணல் நாளை நடக்கிறது.கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில், துணை சட்ட உதவி வக்கீல் பணிக்கு, இரண்டு காலியிடம், அலுவலக உதவியாளர் பணிக்கு இரண்டு காலியிடம் உள்ளது. இப்பணியில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.அதன் படி , விண்ணப்பம் அனுப்பியவர்களுக்கு, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள, சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் நாளை காலை 11:00 மணிக்கு நேர்காணல் நடக்கிறது.