உள்ளூர் செய்திகள்

மெட்ரோ ரயில் நிலையங்களில் சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு சலுகை

பகர்கஞ்ச்: 10ம் மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான சி.பி.எஸ்.இ., தேர்வுகளை சிரமமின்றி சென்று எழுதுவதற்கு வசதியாக மெட்ரோ ரயில் நிலையங்களில் மாணவர்களுக்கு சிறப்பான ஏற்பாடுகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் செய்துள்ளது.இன்று முதல் ஏப்ரல் 4ம் தேதி வரை 10 மற்றும் பிளஸ்2 வகுப்புகளுக்கான சி.பி.எஸ்.இ., தேர்வுகள் நடைபெறுகின்றன. 3.3 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வுக்காக மாணவர்களும் பள்ளி ஊழியர்களும் ஆசிரியர்களும் நகர் முழுதும் அவசர அவசரமாக செல்வர்.இவர்களின் வசதிக்காக சுமுகமான, தொந்தரவு இல்லாத பயணத்தை உறுதி செய்வதற்காக பாதுகாப்புப் பணியாளர்களுடன் இணைந்து டி.எம்.ஆர்.சி., எனும் டில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.மெட்ரோ ஊழியர்கள், பள்ளிகளுக்குச் சென்று, தலைமை ஆசிரியர்களுடன் கலந்துரையாடி, மெட்ரோ நிலையங்களில் மாணவர்களுக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கினர்.தங்கள் பயணத்தைத் திட்டமிடுவதற்கு உதவ, அருகிலுள்ள மெட்ரோ நிலையத்தின் விபரங்களையும், க்யூஆர் குறியீட்டையும் வழங்கும் சுவரொட்டிகளை பள்ளிகளில் வைக்குமாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.தேர்வு நாட்களில் மெட்ரோ நிலையங்களில் மாணவர்களுக்கு உகந்த நடவடிக்கைகள்:* மெட்ரோ நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளின்போது சி.பி.எஸ்.இ., நுழைவுச் சீட்டுகளை காட்டி முன்னுரிமை பெறலாம்* டிக்கெட் அலுவலக இயந்திரங்கள், வாடிக்கையாளர் பராமரிப்பு மையங்களில் டிக்கெட்டுகளை வாங்கும்போது நுழைவுச் சீட்டுகளைக் காட்டி முன்னுரிமை பெறலாம்* மெட்ரோ நிலையங்களில் சிறப்பு அறிவிப்புகள் வெளியிடப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்