உள்ளூர் செய்திகள்

ஏ.ஐ.,க்கு வியக்கத்தக்க எதிர்காலம் இருக்கிறது: திரவுபதி முர்மு

ராஞ்சி: செயற்கை நுண்ணறிவுத்துறையின் எதிர்காலம் வியக்கத்தக்கதாக இருக்கும் என்று ராஞ்சியில் நடந்த கண்காட்சி துவக்க விழாவில், ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசினார்.ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று ஜார்க்கண்டிற்கு இரண்டு நாள் பயணமாக வந்து ராஜ்பவனில் இரவு தங்கினார். அவரது வருகையை முன்னிட்டு, தலைநகரில் ராஞ்சியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.அறிவியல், தொழில்நுட்பம், புதுமை மற்றும் தொழில்முனைவோர் ஆகியவற்றைக் உள்ளடக்கிய கண்காட்சியை ஜனாதிபதி திறந்து வைத்தார். இந்த கண்காட்சியில் ஏ.ஐ.,-இயக்கப்பட்ட ரோபோக்கள் மற்றும் சுயமாக இயக்கப்படும் கார்கள் அடங்கும்.கண்காட்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசியதாவது:செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் ஆகியவற்றின் எதிர்காலம் வியத்தகு முறையில் இருக்கும். உயர் கல்வியில் செயற்கை நண்ணறிவை ஒருங்கிணைக்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. உருவாக்கப்படும் தொழில்நுட்ப வாய்ப்புகள் ஒதுக்கப்பட்ட சமூகங்களுக்கும் கிடைக்க வேண்டும்.இவ்வாறு ஜனாதிபதி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்