உள்ளூர் செய்திகள்

மாணவர்கள் உழைப்பு, முயற்சி ஒழுக்கத்தை பின்பற்ற வேண்டும்

சிவகாசி: மாணவர்கள் உழைப்பு, முயற்சி, ஒழுக்கத்தை பின்பற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி அறிவுரை வழங்கினார்.சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் 25வது ஆண்டு விழா நடந்தது. கல்லூரி செயலர் செல்வராஜன் தலைமை வகித்தார். கல்லூரி துணை முதல்வர் முத்துலட்சுமி வரவேற்றார். முதல்வர் பாலமுருகன் ஆண்டறிக்கை வாசித்தார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி பேசியதாவது, கல்வி அரங்கில் தாய் மொழிக்கு முதன்மை தர வேண்டும். ஆங்கிலத்தை தொடர்பு மொழியாக மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாணவர்கள் கல்லூரி பருவத்தை சரியாக பயன்படுத்தினால் தலைமுறை மாற்றம் ஏற்படும். மாணவர்கள் உழைப்பு, முயற்சி, ஒழுக்கம் ஆகியவற்றை பின்பற்றினால் வாழ்க்கை பிற்காலத்தில் நன்றாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.வெள்ளி விழா மலர், பேராசிரியர்களின் நூல் வெளியீடு நடந்தது. சாதனை புரிந்த பேராசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் விருதுகள் கோப்பைகள் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன. கல்லூரி இணை செயலாளர் ராஜேஷ், ஆலோசனை குழு உறுப்பினர் விஸ்வநாதன், பேராசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். வணிக நிரும செயலரிய துறை தலைவர் செந்தில் குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்