உள்ளூர் செய்திகள்

ஜிப்மர் குழந்தைகள் அறுவை சிகிச்சைத் துறை 500 ரோபோடிக் அறுவை சிகிச்சை செய்து சாதனை

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் குழந்தைகள் அறுவைச் சிகிச்சைத் துறை, 500 ரோபோடிக் அறுவைச் சிகிச்சைகள் என்ற சாதனையை எட்டி உள்ளது.புதுச்சேரி ஜிப்மரில் குழந்தைகளுக்கான ரோபோடிக் அறுவைச் சிகிச்சை திட்டம் 2018ம் ஆண்டில் துவங்கப்பட்டது. இத்திட்டத்தை முதன் முதலில் டாக்டர்கள் குமரவேல், விவேகானந்த் ஜிண்டால் ஆகியோர் துவங்கினர். பின், டாக்டர் பிகாஷ்குமார் நரேடி மற்றும் டாக்டர் கிருஷ்ணகுமார் ஆகியோரும் இத்துறையில் இணைந்ததன் மூலம் விரிவாக்கம் பெற்று வலுவடைந்தது. தற்போது, குழந்தைகளுக்கான 500 ரோபோடிக் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட அறுவைச் சிகிச்சைகளை வெற்றிகரமாக நிறைவு செய்து வரலாற்று சாதனையை எட்டி உள்ளது.சிறுநீரக மற்றும் சிறுநீர்ப் பாதை குறைபாடுகள், குடலியல் மற்றும் செரிமான மண்டல நோய்கள், கல்லீரல் மற்றும் பித்த நாள நோய்கள், மார்பு தொடர்பான நோய்கள் மற்றும் மறு சீரமைப்பு அறுவைச் சிகிச்சைகள் உள்ளிட்ட பல்வேறு சிக்கலான அறுவைச் சிகிச்சைகள் ரோபோடிக் முறையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.ஜிப்மர் இயக்குநர் வீர் சிங் நேகி கூறுகையில் “குழந்தைகளுக்கான 500 ரோபோடிக் அறுவைச் சிகிச்சைகள் என்பது ஜிப்மரின் மருத்துவச் சிறப்புமிக்க சேவை. தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளில் பல லட்சம் ரூபாய் செலவாகக் கூடிய இத்தகைய நவீன சிகிச்சைகள், ஜிப்மரின் பொதுச் சுகாதார சேவை அமைப்பின் மூலம் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் கிடைக்கின்றன.இந்தச் சாதனையை உருவாக்கிய குழந்தைகள் அறுவைச் சிகிச்சைத் துறையினருக்கும், துணை நின்ற அனைத்து துறை மற்றும் பணியாளர்களுக்கும் பாராட்டு” என்றார். குழந்தைகள் அறுவைச் சிகிச்சைத் துறை தலைவர் கிருஷ்ணகுமார் மற்றும் மருத்துவ குழுவினர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்