உள்ளூர் செய்திகள்

பொதுத் தேர்வுகள் குறித்து கவர்னர் அறிவிப்பு

புதுச்சேரி; பொதுத் தேர்வுகள் குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்டு, அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என கவர்னர் தமிழிசை தெரிவித்துள்ளார்.சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாக, தமிழகத்தில் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டு, &'ஆல் பாஸ்&' என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், புதுச்சேரியில் மாணவர்களின் நிலை குறித்து கவர்னர் தமிழிசையிடம் கேட்டபோது, சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், 9, 10 மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும், பழைய நடைமுறை தொடரும் எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அரசு பள்ளிகளில் ஓராண்டாக நிறுத்தப்பட்டிருந்த பால் வழங்கும் திட்டத்தை மீண்டும் துவக்கி வைத்த கவர்னர் தமிழிசை, நிருபர்களிடம் கூறியதாவது:பள்ளிகள் முழு நேரம் இயங்குவது குறித்தும், தேர்வுகள் தொடர்பாகவும் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதனால், கொரோனா தொற்று உள்ள நிலையில், புதுச்சேரியில் பள்ளிகளை முழு நேரமும் நடத்தலாமா, தேர்வு முறையில் தமிழகத்தை பின்பற்றுவதால், 9, 10 மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு தேர்வை இப்போது நடத்தலாமா, தள்ளி வைக்கலாமா அல்லது ரத்து செய்யலாமா என்பது குறித்து கல்வித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது.பெற்றோர்களிடம் கருத்து கேட்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு, அதிகாரிகளுடன் ஆலோசித்து, அதனடிப்படையில் முடிவுகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்