உள்ளூர் செய்திகள்

ஆசிரியர்கள் இடமாற்றம் அண்ணாமலை பல்கலையில் பரபரப்பு

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக இசை கல்லுாரியில், 37 ஆசிரியர்கள் தமிழகத்தில் பல்வேறு கல்லுாரிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டாதல் பரபரப்பு ஏற்பட்டது.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை, 2013 ம் ஆண்டு தமிழக அரசு கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தது. அதையடுத்து, அங்கு பணிபுரிந்த அளவுக்கு அதிகமான ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், தமிழகம் முழுவதும் உள்ள அரசு கல்லூரிகள் மற்றும் துறைகளுக்கு, மாற்றப்பட்டனர்.இந்நிலையில் மிகவும் பழமை வாய்ந்த அண்ணாமலை பல்கலைக்கழக இசை கல்லூரியில் பரதநாட்டியம். வயலின், வாய்ப்பாட்டு, நாதஸ்வரம், நட்டுவாங்கம், மிருதங்கம் மற்றும் தேவாரம், திருவாசகம் பயிற்றுவிக்கும். ஆசிரியர்கள் 37 பேர், தமிழகம் முழுவதும் உள்ள இசை கல்லூரிகள், இசை பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அண்ணாமலை பல்கலைக்கழக பழமையான இசைக் கல்லூரியில் இருந்து இசை ஆசிரியர்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்