உள்ளூர் செய்திகள்

விஜயா வாசகர் வட்டம் மொழிபெயர்ப்பு விருதுகள்

கோவை: கோவையில் உள்ள விஜயா வாசகர் வட்டம் சார்பில், ஆண்டு தோறும் பேராசிரியர் கே.சுப்பிரமணியன் பெயரால் இரண்டு மொழி பெயர்ப்பு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழிலிருந்து பிறமொழிகளுக்கும், பிறமொழியிலிருந்து தமிழுக்கும் மொழிபெயர்க்கப்படும் சிறந்த படைப்பாளர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் பரிசு தொகையும், கேடயமும் வழங்கப்படுகிறது.தமிழிலிருந்து தெலுங்கு மொழிக்கு சிறந்த இலக்கிய நுால்களை மொழி பெயர்ப்பு செய்துள்ள மொழிபெயர்ப்பாளர் பாலாஜிக்கும், மலையாளத்திலிருந்து பல சிறந்த நூல்களை தமிழுக்கு மொழிபெயர்த்துள்ள பேராசிரியர் செந்தில்குமாருக்கும் இந்த ஆண்டுகான மொழிபெயர்ப்பு விருது வழங்கப்படுகிறது. அக்டோபர் முதல் வாரத்தில் நடக்கும் விழாவில் இந்த விருது இருவருக்கும் வழங்கப்படுகிறது. இந்த தகவலை விஜயா பதிப்பகம் உரிமையாளர் வேலாயுதம் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்