உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவர்களின் செயல்திட்ட செயல்பாடுகள் நிகழ்ச்சி

வில்லியனுார்: ஊசுட்டேரி பாரத் வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ., பள்ளியில் மாணவர்களின் செயல்திட்ட செயல்பாடுகள் நிகழ்ச்சியை ஜெகத்ரட்சகன் எம்.பி., பார்வையிட்டு பாராட்டினார்.வில்லியனுார் அடுத்த ஊசுட்டேரி பாரத் வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ., பள்ளியில் மாணவர்களின் செயல்திட்ட செயல்பாடுகள் என்ற நிகழ்ச்சி நடந்தது. பள்ளி நிர்வாகி சந்தான கிருஷ்ணன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் சாந்தி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக லட்சுமி சவுஜன்யா ஐ.பி.எஸ்., தேசிய நல்லாசிரியர் அரவிந்தராஜா, மாநில நல்லாசிரியர் சோமசுந்தரம் ஆகியோர் செயல்திட்ட செயல்பாடுகள் அரங்கை திறந்துவைத்து பார்வையிட்டனர்.தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் பள்ளி நிறுவனர் ஜெகத்ரட்சகன் எம்.பி., மாணவர்களின் செயல்திட்ட செய்பாடு நிகழ்ச்சி அரங்கை பார்வையிட்டு மாணவர்களை பாராட்டினார். பெற்றோர்கள், மாணவர்கள் என திரளாக பார்வை யிட்டனர். விழா ஏற்பாடு களை பள்ளி ஒருங்கிணைப் பாளர்கள், ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்