உள்ளூர் செய்திகள்

கல்லுாரி மாணவர்களுக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு

கடலுார்: கடலுாரில், கல்லுாரி மாணவர்களுக்கு சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.கடலுார் மாவட்ட காவல் துறை சைபர் கிரைம் பிரிவு சார்பில், கல்லுாரி மாணவர்களுக்கான சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு, கிருஷ்ணசாமி பொறியியல் கல்லுாரி வளாகத்தில் நடந்தது. எஸ்.பி., ராஜாராம் தலைமை தாங்கினார். சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி., பிரபாகரன் வரவேற்றார்.இதில், கிருஷ்ணசாமி பொறியியல் கல்லுாரி, கிருஷ்ணசாமி கலைக் கல்லுாரி, கே.என்.சி., மகளிர் கல்லுாரி, செயின்ட் ஜோசப் கல்லுாரி உள்ளிட்ட பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் அரசு வழக்கறிஞர் இந்திரா, கல்லுாரி முதல்வர் இளங்கோவன், தாசில்தார் பலராமன் ஆகியோர் பேசினர்.சைபர் கிரைம் குறித்து கடலுார் டி.எஸ்.பி., பிரபு, பேராசிரியர் சந்தானராஜ், விழுப்புரம் பயிற்சி மையம் இன்ஸ்பெக்டர் கவிதா, எஸ்.பி., சி.ஐ.டி இன்ஸ்பெக்டர் சுதாகர், பேராசிரியர் பென்ஜமின் பிராங்லின் ஆகியோர் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பாடகர் நாகேஷ் சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு பாடலை பாடினார். மாணவர்களின் சந்தேகங்களுக்கு சைபர் கிரைம் பிரிவு அதிகாரிகள் பதில் அளித்தனர். இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி நன்றி கூறினார். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்