ஆய்வக உதவியாளர் பாடவேளை ஒதுக்க உத்தரவு
சென்னை: தமிழகம் முழுதும் உள்ள அரசு மேல்நிலை பள்ளிகளில், 4,000த்துக்கும் மேற்பட்ட ஆய்வக உதவியாளர்கள் பணியாற்றுகின்றனர்.மாணவ - மாணவியர் ஆய்வக செய்முறை வகுப்புகளில் பங்கேற்கும் போது, அவர்களுக்கு உதவும் வகையிலும், ஆய்வகம், ஆய்வக தளவாட பொருட்களை பராமரிக்கும் வகையிலும் தான், இவர்கள் நியமிக்கப்பட்டனர்.ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் இவர்களுக்கு, ஆய்வக பணிகளை ஒதுக்காமல், நிர்வாக பணிகளில் ஈடுபடுத்த படுகின்றனர். இந்நிலையில், வரும் கல்வி ஆண்டு முதல் ஆய்வக உதவியாளர்களுக்கு, செய்முறை பயிற்சி வகுப்புகளுக்கான பணிகளை மட்டுமே ஒதுக்க வேண்டும்.ஆய்வக உதவியாளர்களுக்கும், ஆசிரியர்களை போன்றே பாட வேளை அடிப்படையில், கால அட்டவணை தயாரித்து ஆண்டின் துவக்கத்திலேயே வழங்க வேண்டும் என, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி உத்தரவிட்டுள்ளார்.