உலக சாதனை சான்றிதழ் கமிஷனரிடம் ஒப்படைப்பு
சென்னை: எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், சர்வதேச பெண்கள் தினத்தன்று, 5,050 பெண் போலீசார் அணிவகுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.பெண் போலீசார் இணைந்து அமைத்த விழிப்புணர்வு அணிவகுப்பை, வேர்ல்டு ரெக்கார்ட் யூனியன் என்ற அமைப்பு உலக சாதனையாக அங்கீகரித்தது. நேற்று, உலக சாதனை அமைப்பைச் சேர்ந்த நிர்வாக அதிகாரி ஷெரிபா, சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோடிடம், உலக சாதனைக்கான சான்றிதழ் மற்றும் ஆவணங்களை வழங்கினார்.பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் வனிதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.