தடய அறிவியல் பல்கலைக்கு செங்கல்பட்டில் நிலம்
சென்னை: தமிழகத்தில் தேசிய தடய அறிவியல் பல்கலை அமைப்பதற்கு, செங்கல்பட்டு மாவட்டம் கீழ்கோட்டையூரில், தமிழக அரசு, 35 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்துள்ளது. கட்டுமான பணிகள் விரைவில் துவங்க உள்ளன.இந்நிலையில், தேசிய தடய அறிவியல் பல்கலை இயக்குநர் பூர்விக் புக்கிரியால், செயல் பதிவாளர் ஜடேஜா, தமிழ்நாடு தடய அறிவியல் துறை இயக்குநர் முனிராசன் ஆகியோர், முதல்வர் ஸ்டாலினை தலைமை செயலகத்தில் நேற்று சந்தித்து, இதற்கான அரசாணையை பெற்றுக் கொண்டனர்.தடய அறிவியல் பல்கலை அமைக்க நிலம் ஒதுக்கியதற்கு நன்றி தெரிவித்தனர். தி.மு.க., - எம்.பி., கனிமொழி, வி.சி., தலைவர் திருமாவளவன் உடன் இருந்தனர்.