உள்ளூர் செய்திகள்

மின்சிக்கன வாரவிழா போட்டி; மாணவர்களுக்கு பரிசளிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் மின்சிக்கன வார விழா போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.விழுப்புரம் மாவட்டத்தில், தேசிய மின் சிக்கன நாள் வார விழாவை முன்னிட்டு, மின் ஆற்றல் மன்றங்கள் செயல்படும் அரசு பள்ளிகளில், தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில் இந்தாண்டு மின் சிக்கன வார விழா போட்டிகளை நடத்தியது. இந்த மன்றங்கள் செயல்படும் 42 அரசு பள்ளிகளில் பேச்சு, ஓவியம், கட்டுரை போட்டிகள் நடத்தி தலா 3 பேர் வீதம் 126 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.இதற்கான பரிசளிப்பு விழா, விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு, விழுப்புரம் மின்துறை உதவி செயற்பொறியாளர் விஜயகுமார் வரவேற்றார். மின்துறை தலைமை பொறியாளர் சதாசிவம் தலைமை தாங்கி பேசினார். மேற்பார்வை பொறியாளர் நாகராஜ்குமார் முன்னிலை வகித்தார்.மாவட்ட கல்வி அலுவலர் அருள், மின்துறை செயற் பொறியாளர்கள் சந்திரன், சிவசங்கரன், ஏழுமலை, சுரேஷ்குமார், பாக்யராஜ், அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் சிவமுருகன், பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், ஆற்றல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஜெயபாஸ்கர் வாழ்த்த பேசினர்.விழாவில், போட்டிகளில் வெற்றி பெற்ற 126 மாணவ மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மின்துறை ஊழியர்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் பங்கேற்றனர். உதவி செயற்பொறியாளர் இளவரசி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்