கடிதம் எழுதும் போட்டி பங்கேற்க அழைப்பு
உடுமலை: மாநில, தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டியில் பங்கேற்க மாணவர்கள், பொதுமக்களுக்கு தபால்துறை அழைப்பு விடுத்துள்ளது.திருப்பூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் பட்டாபிராமன் கூறியிருப்பதாவது:ஆக., 1 முதல் அக்., 31 வரை A Letter to Mother Earth: My Promise to Protect என்ற தலைப்பில் கடிதம் எழுதும் போட்டி நடைபெறுகிறது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி அல்லது ஏதேனும் ஒரு வட்டார மொழியில் கையால் எழுதிய கடிதங்களை, திருப்பூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் வாயிலாக அனுப்பலாம்.மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெறுவோருக்கு முறையே, 25 ஆயிரம், 10 ஆயிரம், 5 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும்.போட்டி தொடர்பான கூடுதல் விபரங்களை திருப்பூர் தலைமை தபால் அலுவலகம், மேட்டுப்பாளையம் மற்றும் தாராபுரம் துணை தபால் அலுவலகங்களில் அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.