போட்டி தேர்வுக்கான இலவச வகுப்பு துவக்கம்
அவிநாசி: அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரயில், டி.என்.பி.எஸ்.சி. போட்டி தேர்வெழுதும் மாணவர்களுக்கான இலவச வகுப்புகள் துவக்க விழா நடைபெற்றது.கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) ஹேமலதா தலைமையில் நடைபெற்றது. வேலைவாய்ப்பு முகாம் அலுவலர் அருண் வரவேற்றார். இப்பயிற்சி கல்லுாரி வளாகத்திலேயே நடைபெறுவதால் அனைத்து வகுப்புகளிலும் பங்கேற்று பயிற்சியை முழுமையாக பயன்படுத்தி கொள்ள மாணவ, மாணவியருக்கு அறிவுறுத்தப்பட்டது. கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் வழிகாட்டு மைய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சந்திரபாஸ்கர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, போட்டி தேர்வில் உள்ள படிநிலைகள் மற்றும் பயிற்சியின் அவசியத்தை விளக்கினார். மாணவர் தனஞ்ஜெயன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முனைவர் தியாகராஜன் மற்றும் அருண்குமார் செய்திருந்தனர்.