தற்காலிக செவிலியர் பணிகளுக்கு செப்., 25க்குள் விண்ணப்பிக்கலாம்
மதுரை: மதுரை மாவட்ட நலவாழ்வு சங்கம், தேசிய நலவாழ்வுக் குழுமம் சார்பில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை, மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி, மாநகராட்சி ஆகியவற்றின் கீழ் செயல்படும் மருத்துவமனைகளில் 90 தற்காலிக செவிலியர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மாநில நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்யப்பட்டு இந்திய செவிலியர் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் செவிலியர் கல்லுாரியில், செவிலியர் பட்டயப்படிப்பு அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் பெற்ற 50 வயதுக்குட்பட்ட செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்.தற்காலிக பணி என்பதால் எக்காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படாது. இதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் வழங்க வேண்டும். விண்ணப்பத்துடன் மதிப்பெண் பட்டியல்கள், டி.சி., பிறப்பு, ஜாதி, இருப்பிடம், சிறப்பு தகுதிக்கான சான்றுகள் ஆகியவற்றின் சுய சான்றொப்ப நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும்.விண்ணப்பத்தை https://madurai.nic.in/notice_category/recruitment/ என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து செப்., 25 மாலை 05:00 மணிக்குள் நேரிலோ தபால் மூலமாகவோ அனுப்பலாம். வேறு ஒப்பந்த செவிலியர் பணியிடங்களுக்கு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் ஏற்கனவே விண்ணப்பித்திருந்தாலும் இப்பணியிடங்களுக்கு புதிதாக விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பங்களை, 'மாவட்ட சுகாதார அலுவலர்/நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகம், விஸ்வநாதபுரம், மதுரை - 625 014' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விவரங்களுக்கு: 0452 2640778.