உள்ளூர் செய்திகள்

பட்டதாரி ஆசிரியர் தேர்வு பிப்., 4க்கு மாற்றம்

சென்னை: பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வள மைய ஆசிரியர் தேர்வு, பிப்., 4க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியம், பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வள மைய ஆசிரியர் தேர்வு, ஜன., 7ல் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் வைத்து, தேர்வர்களின் சிரமத்தை தவிர்க்க, தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு, ஜன., 7க்கு பதில், பிப்., 4ல் நடக்கும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஜன., 7 தேர்வுக்கு வழங்கப்பட்ட நுழைவு சீட்டையே பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்