உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு மருந்துகளை விற்க தடை

தேனி: பல்வேறு மருந்துகளை மாணவர்கள் போதை உட்பட தவறான காரணங்களுக்கு பயன்படுத்துவதால்,மருந்துக்கடைக்காரர்கள் மாணவர்களுக்கு விற்க கூடாது எஸ்.பி., மகேஷ் அறிவுறுத்தி உள்ளார். அவர் கூறியிருப்பதாவது: உடல் நலனை காக்கும் பல்வேறு மருந்துகளை மாணவர்கள் போதை உட்பட தவறான காரணங்களுக்கு பயன்படுத்துகின்றனர். வீட்டில் பெரியவர்கள் வாங்கி வரச்சொன்னதாக கூறி, அவர்கள் மருந்துகளை வாங்கி பயன்படுத்துவது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே மருந்துக்கடைக்காரர்கள் மாணவர்களுக்கு மருந்துகளை விற்க வேண்டாம். பெரியவர்கள் வந்தால் மட்டும் கொடுக்க வேண்டும் அல்லது அவசர காரியங்களுக்கு முக்கிய மருந்துகளை டாக்டர் சீட்டு கொண்டு வந்தால் தரலாம் என அறிவுறுத்தப்படுகிறது. இது குறித்து ஒவ்வொரு டி.எஸ்.பி. தலைமையிலும் மருந்துக்கடைக்காரர்களை அழைத்து மீட்டிங் நடத்தி அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அடுத்து எஸ்.பி. அலுவலகத்தில் எனது தலைமையில் மீட்டிங் நடத்தி அறிவுரைகள் வழங்கப்படும் என்றார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்