பள்ளி மாணவிகளுக்கான வாலிபால் போட்டி
சிவகாசி: விருதுநகர் மாவட்ட வாலிபால் கழகம் சார்பில், பள்ளி மாணவிகளுக்கான வாலிபால் போட்டி, நாளை (9ம்தேதி) சிவகாசி அரசன் ஜி.விஜயகுமார் வாலிபால் அகடாமியில் நடைபெறுகிறது. இப்போட்டியில் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து பள்ளிகளும் கலந்து கொள்ளலாம். போட்டியில் முதல் நான்கு இடங்களை பெறும் அணிக்கு தனிநபர் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். முதல் இடம் பிடிக்கும் அணிக்கு ராஜேஸ்வரி விஜயகுமார் நினைவு கோப்பை வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் அணிகள் காலை 7 மணிக்கு மைதானத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். சிறந்த விளையாட்டு வீராங்கணைகள் மாவட்ட வாலிபால் அணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் விபரங்களுக்கு 99436 42466 என்ற மொபைலில் தொடர்பு கொள்ளலாம். போட்டி ஏற்பாடுகளை மாவட்ட வாலிபால் கழக தலைவர் ஜி.வி.கார்த்திக், செயலாளர் பிரபாகரன், சேர்மன் நாகராஜன் செய்துள்ளனர்.