நேரு கல்லூரியில் பயிற்சி வகுப்பு
கோவை: நேரு கட்டடக்கலை கல்லுாரியின், கட்டடக்கலை மாணவர்களின் கலை ஆற்றல் மற்றும் புதிய படைப்பு எண்ணங்களை வெளிப்படுத்தும் விதமாக, களிமண் மற்றும் வயர் பயிற்சி வகுப்பு நடந்தது. விஷூவல் ஆர்ட்ஸ் துறை சார்ந்த, சந்தோஷ் ஷிவாலிங், விநாயக் ஷெட்டி மற்றும் தயானந்த் ஆகியோர் பங்கேற்றனர். 3டி களிமண் சிற்பம் குறித்த டெமோ மற்றும் தனிப்பட்ட வேலைகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. கட்டடக்கலை நிபுணர் அம்ருதா பேசினார். நேரு கல்விக் குழுமங்களின் செயலாளர் கிருஷ்ணகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.