மின்னணு வர்த்தகம் கல்லூரியில் ஆய்வரங்கம்
கோவை: கோவைபுதுார், வி.எல்.பி., ஜானகியம்மாள் கலை அறிவியல் கல்லுாரியில், பி.காம்.,(சி.ஏ) துறை சார்பில், இ-காமர்ஸ் பன்முக பரிமாணங்கள் தலைப்பில் ஆய்வரங்கம் நடந்தது. எச்.சி.எல்., நிறுவன முதன்மை நிதி ஆய்வாளர் வெனன்சியஸ் மார்டின் பங்கேற்று, இ-காமர்ஸின் நோக்கங்கள், உலகளாவிய இணையம் சார்ந்த நிதி பரிவர்த்தனைகள், இணையவழி வாணிபபொருட்கள் சார்ந்த விபரங்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். பி.காம்., (சி.ஏ) துறையின் செல்வநாயகி குழுவினர் முதல்பரிசையும், வெங்கடேஷ் குழுவினர் இரண்டாம் பரிசையும் பெற்றனர். இவர்களுக்கு தேர்வு கட்டுப்பாட்டு ஆணையர் மகேஸ்வர் பரிசுகள் வழங்கினார். இளங்கலை இயக்குனர் சித்ரா உட்பட துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.