மதுரை காமராஜ் பல்கலை அறிவிப்பு
மதுரை காமராஜ் பல்கலைக்குட்பட்ட கல்லூரிகள் வரும் கல்வி ஆண்டில் (2010 2011) புதிய படிப்புகளை துவக்கவோ, இணைவிப்புகள் பெறவோ வருகிற அக். 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதன் பின்பு வரும் 2010ம் ஆண்டு ஜன. 31ம் தேதிக்குள் விண்ணப்பிப்போர் ஒரு படிப்புக்கு ஒரு மாதத்திற்கு ரூ. 20 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். அதன் பின்பு வரும் விண்ணப்பங்கள் எந்த அறிவிப்பும் இன்றி தள்ளுபடி செய்யப்படும். விண்ணப்பங்களை கல்லூரி வளர்ச்சிக்குழு டீன் அலுவலகத்தில் பெறலாம். அதற்கான படிவங்களில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். முறையான படிவமின்றியும், கால அவகாசத்திற்குள்ளும், மாணவர் எண்ணிக்கைக்கு ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் இதர அமைப்புகளின் அங்கீகாரம் பெறாமலும் விண்ணப்பித்தால் தள்ளுபடி செய்யப்படும் என பதிவாளர் சிங்காரம் தெரிவித்துள்ளார்.