சிவில் சர்வீஸ் தேர்வில் மாற்றம்!
யு.பி.எஸ்.சி., சேர்மன் டி.பி.அகர்வால் கூறியதாவது: குடிமைப் பணிகளின் நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் சில மாற்றங்களைச் செய்வது குறித்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக, சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வில் (பிரிலிமினரி) செயல்திறன் தேர்வு எனப்படும், ஆப்டிடியூட் தேர்வையும் சேர்க்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளோம். இத்தேர்வில் இரண்டு அப்ஜக்டிவ் வகை கேள்வித் தாள்கள் இருக்கும். இது, அனைத்து மாணவர்களுக்கும் பொதுவானதாக இருக்கும். குடிமைப் பணிகளில் அன்றாடப் பிரச்னைகளை எதிர்கொள்வது மற்றும் தார்மீக மற்றும் நீதி சார்ந்த முடிவுகள் எடுப்பது குறித்த மாணவர்களின் செயல்திறனை நிர்ணயிப்பது தான் இந்த செயல்திறன் தேர்வின் முக்கிய நோக்கம். மற்றபடி சிவில் சர்வீஸ் தேர்வுகளில் எவ்வித மாற்றமும் இருக்காது. இவ்வாறு அகர்வால் தெரிவித்தார்.