உள்ளூர் செய்திகள்

அறுவை சிகிச்சையில் நவீன தொழில்நுட்பம்

முடநீக்கியல் மற்றும் விபத்து காய சிகிச்சைக்கான உலக சங்கத்தின் இளம் மருத்துவர்களின் இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கு, சென்னை, போரூர் ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், நேற்று முன்தினம் துவங்கியது.கருத்தரங்கை துவக்கி வைத்து, சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி பேசியதாவது:மேம்படுத்தப்பட்ட மெய்நிகர் மற்றும் ரோபோ தொழில்நுட்பத்தின் வாயிலாக, துல்லியமான மிகச்சிறந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்ள முடியும்; நோயாளிகளும் விரைவாக குணமடைவர். இதற்கு ஆதாரமான மனித உடம்புக்கான கணிதம் மற்றும் தொழில்நுட்ப உருவாக்கத்தால், இது சாத்தியமாகும். மருத்துவ கல்லுாரிகள், பிற அமைப்புகளுடன் இணைந்து, சென்னை ஐ.ஐ.டி., ஆய்வுகளை செய்து வருகிறது. மிகத் துல்லியமான ஊடுருவல் மற்றும் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதில், நம் நாடு வேகமாக பயணிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.இந்தியா, பிலிப்பைன்ஸ், மலேஷியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, எகிப்து, ஸ்ரீலங்கா, ஹாங்காங் ஆகிய நாடுகளை சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பங்கேற்றுள்ளனர். பல்கலை துணை வேந்தர் டாக்டர் உமா சேகர், தமிழ்நாடு முடநீக்கியல் கழகத் தலைவர் டாக்டர் சிங்காரவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்