உள்ளூர் செய்திகள்

திருக்குறள் ஒப்புவித்த மாணவர்களுக்கு பரிசு

திண்டுக்கல்: திருக்குறள் முற்றோதல் போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவிகளுக்கு ரூ.60 ஆயிரத்துக்கான காசோலையை கலெக்டர் பூங்கொடி வழங்கினார்.தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு எனும் திட்டத்தின் கீழ் 1330 குறள்களை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதம் பரிசுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் 2021- 22க்கான போட்டிகள் டிச.6 ல் கலெக்டர் அலுவலகத்தில் திறனறிக் குழவின் முன்னிலையில் நடைபெற்றது. நத்தம் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி மாணவி ரமா, நத்தம் ராம்சன்ஸ் பதின்ம மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மோகனப்பிரியா, பிரேமா, ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவி அன்புமதி வெற்றிப் பெற்றனர்.இந்த மாணவிகளுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. வெற்றிப் பெற்ற மாணவிகளிடம் தலா ரூ.15 ஆயிரத்துக்கான காசோலை, முதல்வரின் கையொப்பமிடப்பட்ட பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை கலெக்டர் பூங்கொடி வழங்கினார். தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் இளங்கோ உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்