உள்ளூர் செய்திகள்

பள்ளி அளவிலான திரைப்பட போட்டி

உடுமலை: உடுமலை, பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், சிறார் திரைப்படம் திரையிடும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியை பள்ளி தலைமையாசிரியர் விஜயா துவக்கி வைத்தார். பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்பு படி, செப்., மாதத்திற்கான சிறார் திரைப்படம் திரையிடப்பட்டது. தொடர்ந்து ஆறு முதல் ஒன்பது வகுப்பு மாணவர்களுக்கான திரைப்படம் குறித்த விமர்சனம், குறும்படம், தனிநபர் நடிப்பு போட்டிகள் பள்ளி அளவில் நடத்தப்பட்டது.போட்டிகளில் வெற்றி பெற்ற, தலா ஒரு மாணவர் வட்டார அளவிலான போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். போட்டிக்கான ஏற்பாடுகளை, திரைப்படம் காட்சியிடல் மன்ற பொறுப்பாசிரியர் ராஜேந்திரன், நிர்மலா மேரி செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்